PSTM சான்றிதழ் என்றால் என்ன?

PSTM சான்றிதழ் என்றால் என்ன?

PSTM பொருள் – Person Studied in Tamil Medium (PSTM சான்றிதழ்).

TNPSC ல் முற்றிலுமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது.


தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தால் அது தமிழ் வழி கல்வி ஆகாது, ஆங்கிலம் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களையும் தமிழில் படித்திருந்தால் மட்டுமே PSTM சான்றிதழ் பெற முடியும்.

நீங்கள் தமிழ் வழியில்தான் படித்து இருக்கிறீர்கள் என்பதனை நிருபிக்க, TNPSC-க்கு நீங்கள் படித்த பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் வாங்கி TNPSC ல் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும்பொழுது PSTM சான்றிதழின் வேறு எந்த விவரத்தையும் TNPSC கேட்பதில்லை. நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் PSTM சான்றிதழ் வாங்கினாலும் போதுமானது. தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கும் பொழுதே நீங்கள் இந்த PSTM சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், PSTM சான்றிதழ் விரைவில் பெற பரிந்துரைக்கிறேன்.

இந்த சான்றிதழின் மாதிரி படிவம் TNPSC ஆல் கொடுக்க பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு (SSLC), மற்றும் பட்ட படிப்பு (Degree) இவற்றிற்கு தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி வைத்து கொள்ள வேண்டும். இந்த பக்கத்திலிருந்தே நீங்கள் இந்த மாதிரி படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

PSTM க்கான வடிவம் TNPSC ஆல் ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் நீங்கள் தமிழ் மொழியில் நிரப்பலாம்.

  • Group 1 – பட்டம் தமிழில் படித்திருக்க வேண்டும்.
  • Group 2 – பட்டம் தமிழில் படித்திருக்க வேண்டும்.
  • Group 4 – 10 ஆம் வகுப்பு/ SSLC தமிழ் மொழியில் படித்திருக்க வேண்டும்.
  • VAO – 10 வது தமிழ் வழி கல்வியில் படித்திருக்க வேண்டும்.

PSTM சான்றிதழ் பதிவிறக்க:

Related Post